பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி சென்னையில் உடல்நலக் குறைவால் இன்று (அக்.24) காலமானார். ‘ஆள்கூட்டத்தில் தனியே’, ‘அக்ஷரங்கள்’, ‘வாடகைக்கு ஒரு ஹ்ருதயம்’, ‘காணாமரயத்து’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஐ.வி.சசி.
சசி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து தன் ட்விட்டர் பக்கத்தில், ”நெடுங்கால நண்பரும் இணையிலா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார். என் சகோதரி சீமா சசிக்கும் குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும்” என்று ட்வீட் செய்துள்ளார்
