ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரையும் ஆணையம் அழைக்காவிட்டால், தங்கள் தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோருவோம் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் குறுக்குவிசாரணை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு பல முறை தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டார். அப்பல்லோ மருத்துவர் ஆப்ரஹாம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே மருத்துவர் பாலாஜி ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றதாகவும், அப்போது ஜெயலலிதா முழு நினைவுடன் இருந்ததாகவும்