
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு ஆளுநருக்கும் பொருந்தும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து தெரிந்து கொள்ளட்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆளுநருக்கு புரியவில்லை என்றால் வழக்கறிஞர் மூலம் விளக்கம் பெற்றுக்கொள்ளட்டும் என்று அவர் கூறியுள்ளார்.