ஏமனில் நடப்பது என்ன?

ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுக் கிளர்ச்சியின் உச்சக்கட்டமாகவே அங்குள்ள தொலைக்காட்சி அலுவலகம் கைப்பற்றப்பட்டு, பத்திரிகையாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர்  அலி அப்துல்லா சலேஹ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹவிதி படையினரால் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மற்றொரு தரப்பினர் இதனை மறுத்து வருகின்றனர்.

அல் ஜசீரா தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள்….

 

ஏமன் நாட்டில் 33 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் அலி அப்துல்லா சலேஹ். பொதுமக்கள் மற்றும் அரசியல் நிர்பந்தம் காரணமாக, இவர் 2012-ம் ஆண்டு பதவி விலகினார்.

பின்னர், 2015-ம் ஆண்டு, அப்தராப்பு மன்சூர்  ஹாதி, அதிபராக பதவி ஏற்றார். ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அவருக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் குதித்தனர். இதனால், சவுதி அரேபியாவுக்கு மன்சூர் ஹடி தப்பிச்சென்றார். அவருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை, ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையில் குதித்தது.

அதே சமயத்தில், பதவி இழந்த அதிபர் அலி அப்துல்லா சலேஹ் தலைமையிலான படைகளும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் கைகோர்த்து, கூட்டுப்படைக்கு எதிராக போரிட்டது.

இதற்கிடையே, கடந்த வாரம் திடீர் திருப்பமாக, அலி அப்துல்லா சலேஹூக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான உறவு முறிந்தது. இருதரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து போரிட்டனர்.

இந்நிலையில், அலி அப்துல்லா சலே படைகளுக்கு எதிராக முன்னேறி வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தலைநகர் சனா அருகே உள்ள அலி அப்துல்லா சலே வீட்டை குண்டு வைத்து தகர்த்தனர்.

இதில், சலே கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வானொலியிலும், அல்-மசிரா டி.வி.யிலும் நேற்று அறிவித்தனர்.

அலி அப்துல்லா சலேஹின் உடல் என்று கூறி, தலைக்காயத்துடன் ஒரு சடலம் காண்பிக்கப்பட்டது. அதை போர்வையால் சுற்றி, கிளர்ச்சியாளர்கள் இழுத்து செல்வது, அந்த வீடியோ காட்சியில் காண்பிக்கப்பட்டது. அப்போது, அவர்கள் சலேவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

சலேஹூடன் அவருடைய ஆதரவாளர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகவும் கிளர்ச்சியாளர்களின் டி.வி.யில் செய்தி வெளியானது.

இருப்பினும், சலேஹின் படையை சேர்ந்த யாரும் இச்செய்தியை உறுதிப் படுத்தவில்லை.

 

நன்றி – அல் ஜசீரா (வீடியோ)

 

நாக்பூரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை..

விஷால் வேட்புமனு நிராகரிப்பு : திருமாவளவன் கண்டனம்..

Recent Posts