திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இத்திருவிழாவின் 2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை தினமும் காலையில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கமான நேரத்தில் நடக்கிறது.
இது போல் தமிழகத்தின் அனைத்து முருகன் கோவில்களிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,ஐரோப்பிய நாடுகளில் உள்ள முருகன் ஆலயங்களிலும் தொடங்கியது. கந்தசஷ்டி திருவிழா தமிழர்கள் வாழும் நாடுகளில் கொண்டாடப்படுவது முக்கிய சிறப்பாகும்.
