
கரோனா தொற்று பரவல் அதிகரித்த வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரைக்குதடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு தடையில்லை என்றும் தேர்தலுக்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதால் தடைவிதிக்க முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கரோனா பரவல் தடுப்பு விதிகளை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதிபடுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தி உள்ளது.