காப்பாற்றப்படுமா காரைக்குடி?

” கோவிலூர் ஆலை கழிவு நீர் கலந்த பெரிய கண்மாய் உடைப்பு “

” காரைக்குடி மக்களே சாக தயாராக இருங்கள் ”

கோவிலூர் ரசாயன ஆலையின் ரசாயனம் கலந்த நச்சு நீர் , ஆலையின் கழிவு நீர் , விசம் கலந்த நீர் பல ஆண்டுகளாக கோவிலூர் பெரிய கண்மாய்யில் கலந்து மண்ணையும் மக்களையும் விவசாய நிலங்களை நாசமாக்கிய ஆலையின் கழிவு நீர் ஏரி போல காட்சி தந்த கண்மாயே , இரவோடு இரவாக JCB இயந்திரம் கொண்டு இருபதுஅடி அகலம் கொண்ட கண்மாயின் கரைகளை உடைத்து ரசாயனம் கலந்த விசம் கலந்த கழிவு நீரை வயல்களில் பாச்சி சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களை நாசம் செய்து அதன் வழியாக காரைக்குடி சம்பை ஊற்றை முற்றிலும் அளிக்கும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது .

மாநில அரசே மாவட்ட நிர்வாகமே , மாவட்ட ஆட்சியர் , துணை ஆட்சியர் , காரைக்குடி வட்டாச்சியர் ,காரைக்குடி நகராட்சியே ஏனைய அரசு அதிகாரிகளே உடனே காரைக்குடி சம்பை ஊற்றை பாதுகாத்து காரைக்குடி மக்களை காப்பாற்றுகள்.

– வாட்ஸ் அப் பகிர்வில் இருந்து