காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண காஷ்மீரில் பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு சார்பில் பிரதிநியாக மாஜி உளவுத்துறை அதிகாரி தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடப்பதும் திடீர் திடீரென வன்முறை வெடிப்பதும் வாடிக்கையாவிட்டது. பயங்கரவாதிகளின் ஊடுருவலும் , பிரவினைவாத அமைப்பு தலைவர்களின் போராட்டம் காஷ்மீரின் அமைதியை சீர்குலைத்து வருகிறது.
இந்நிலையில் அனைத்து தரப்பிலும் பேச்சுவர்த்தை நடத்திய மத்திய அரசு சார்பில் முன்னாள் உளவுத்துறை தலைவர் தினேஷ்வர் சர்மா,63 நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காஷ்மீரில் பல்வேறுபிரிவினைவாத அமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தினேஷ்வர் சர்மா நியமனத்தை இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் எந்த அரசியல் தலையீடும் இன்றி சுதந்திரமான முறையில் சர்மா செயல்படுவார் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளார்.
மெகபூபா வரவேற்பு
மத்திய அரசின் முடிவுக்கு, ஜம்மு – காஷ்மீர் முதல்வர், மெஹபூபா முப்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். ‘மத்திய அரசின் முயற்சி வரவேற்கத்தக்கது. இப்போதைய தேவை, பேச்சு மட்டுமே; அதுவே, தீர்வை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் ஒரே வழி’ என, ‘டுவிட்டரில்’ அவர் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தினேஷ்வர் சர்மா கூறுகையில், எனக்கு கிடைத்த இந்த பொறுப்பை பெருமையாக கருதுகிறேன். இன்னும் சில தினங்களின் காஷ்மீர் சென்று எனது பணியை துவக்குவேன் என்றார். உளவுத்துறையில் பல்வேறு பொறுப்புளை வகித்த தினேஷ்வர் சர்மா கடந்த 2016-ம் ஆண்டு பணி நிறைவு பெற்றார்.