கிரானைட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. சகாயம் குழுவின் 212 பரிந்துரைகளில் 131 ஏற்கப்பட்டுள்ளதாகவும், 67 நிராகரிக்கப்பட்டதாகவும் தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
