முக்கிய அமைச்சர், காவல்துறை உயரதிகாரி உட்பட பலர் மீதும் குற்றச்சாட்டு எழுந்ததால் குட்கா முறைகேடு வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எங்களது கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி, உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குட்கா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த ஜெ.அன்பழகனே இந்த மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.
