சந்திர கிரகணம் 8.41 வரை நீடிக்கும்..


சென்னையில் சந்திர கிரகணத்தை மாலை 6.05 மணி முதல் பார்க்கலாம் என்றும், கோவையில் 6.18 மணிக்கு தெரியும் என்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

அபூர்வ சந்திர கிரகணம் இந்தியாவில் தொடங்கியது. 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ சந்திர கிரகணம் இந்தியாவில் மாலை 5.18-க்கு தொடங்கிய சந்திரகிரகணம் 6.21 வரை நீடிக்கும்.

ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்கு மாநிலங்களில் மாலை 6.21 முதல் 7.37 வரை தெரியும். அரிய சந்திர கிரகணம் சென்னையில் மாலை 6.04 முதல் 9.38 மணி வரை காணலாம். சுமார் 6.59 மணிக்கு மிகப்பெரிய அளவில் நிலாவை காணலாம்..

பெரியதாகத் தெரியும் நிலா:
வழக்கமான பவுர்ணமி நாளை விட இன்று 14 சதவீத பெரியதாக நிலா காட்சியளிக்கும். இன்றைய பவுர்ணமி நிலா வழக்கத்தைவிட 30% கூடுதல் பிரகாசமாக காட்சி தரும். அதிகப் பிரகாசமாகவும் 14% பெரியதாகவும் காட்சி தருவதால் சூப்பர் நிலா என்று அழைக்கப்படுகிறது.

நீல நிலா:
ஒரே நேரத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்தால் 2 வது வருவது நீல நிலா எனப்படுகிறது. ஜனவரி 1-ம் தேதி பவுர்ணமி வந்தபோதிலும் 31 ம் தேதியும் முழு நிலா நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

கிரகணத்தை காண மக்கள் ஆர்வம்:
ஆபூர்வ சந்திர கிரகணத்தைக் காண தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். சென்னை கோளரங்கத்தில் வரிசையில் நின்று தொலைநோக்கி மூலம் கிரகணம் பார்க்கின்றனர்.

காளஹஸ்தி சிவன் கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி மாலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. சந்திர கிரகணத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பிரதான கோயில்களின் நடை சாத்தப்பட்ட நிலையில் காளஹஸ்தி கோயில் திறக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பிரதான கோயில்களின் நடை சாத்தப்பட்டது.

டெல்லியில் மிதமான நில அதிர்வு

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு: கொட்டிவாக்கம் தொழிலதிபர் கைது

Recent Posts