சவுதியில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தேவையில்லை: இளவரசர் முகமது பின் சல்மான்..

சவுதியின் முதன்மை இஸ்லாமிய மதபோதகர் ஷேக் அப்துல்லா அல் முட்லாக் கருத்தின்படி சவுதியில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். கலாச்சாரத்தை சீர்குலைக்காத எளிமையான உடை அணிந்தால் போதும் என்றும் உலகில் இஸ்லாத்தை பின்பற்றும் பல நாடுகள் இருக்கிறது. பல கோடி இஸ்லாமிய பெண்கள் இருக்கிறார்கள். இதில் 90 சதவிகிதம் பேர் இறுக்கமாக பர்தா அணிவதில்லை. அப்படி இருக்கும் போது நாம் மட்டும் இப்படி எல்லாம் கட்டுப்பாடு விதிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

பெண்கள் பர்தா அணியாமல் இருப்பது சவுதி பெரிய குற்றமாகும், சவுதி சட்டத்தில் இதற்கு பெரிய தண்டனை இருக்கிறது. இந்த நிலையில் அங்கு இருக்கும் பெரிய மதபோதகர் ஷேக் அப்துல்லா அல் முட்லாக் இதனை கூறியது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கருத்து விரைவில் சட்டமாக மாற்றப்படவும் வாய்ப்பு உள்ளது. சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் இதை சட்டமாக மாற்ற வழி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றபின் சவுதியில் நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பரில் சவுதி பெண்கள் கார் ஓட்ட லைசென்ஸ் பெறலாம் என்று தெரிவித்தார். பல்வேறு பணமுதலைகள் மீதும் நடவடிக்கை எடுத்தார். மேலும் முதல்முறையாக சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதுவே சவுதியின் முதல் தியேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் “கொம்பன்“ காளை உயிரிழப்பு..

தார் பாலைவனத்தில் 11.48 கோடி டன் தங்கம் ..

Recent Posts