சின்னத்தம்பி: நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சின்னத்தம்பி யானையின் நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில் யானைகள் வழித்தடத்தில் செங்கல் சூளைகள் உள்ளதாகவும், இதன் காரணமாகவே யானைகள் ஊருக்குள் நுழைவதாகவும் கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

செங்கல் சூளைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை தான் சின்னத்தம்பி யானை ஊருக்குள் நுழையக் காரணம் என்றும், எனவே செங்கல் சூளைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,  சின்னதம்பியின் நடமாட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.