சிறுநீர் மூலம் யூரியா தயாரிக்கலாம் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யோசனை..

சிறுநீர் மூலம் யூரியா தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டால், யூரியாவை இறக்குமதி செய்யும் தேவை இந்தியாவுக்கு இருக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பேசிய அவர், உயிரி எரிபொருள் தயாரிப்பில் மனிதர்களின் சிறுநீர் பயன்படும் எனத் தெரிவித்தார்.

சிறுநீரில் இருந்து அம்மோனியம் சல்பேட், நைட்ரஜன் எடுக்கலாம் என்றும், சிறுநீரில் இருந்து யூரியா தயாரிக்கலாம் என்றும் நிதின் கட்கரி கூறினார்.

விமான நிலையங்களில் மனிதர்களின் சிறுநீரைச் சேமித்து வைக்க அறிவுறுத்தி இருப்பதாகக் கூறிய அவர்,

நாடு முழுவதும் இதைச் செய்தால், யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

தனது யோசனைகள் அற்புதமானவை என்பதால், யாரும் தனக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் நிதின் கட்கரி கூறினார்.

துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு…

திமுக கூட்டணியில் இந்திய கம்யூ கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு..

Recent Posts