சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
The Lancet medical journal வெளியிட்டுள்ள 2015-ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் 90 லட்சம் பேர் உலகம் முழுவதும் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது. இது எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா மூன்றின் காரணமாக உயிரிழப்போரை விட மூன்று மடங்கு அதிகமானோர் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக 18.1 லட்சம் பேரும், நீர் மாசுபாடு காரணமாக 6.4 லட்சம் பேரும் என 25 லட்சம் பேர் 2015ல் இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள The Lancet medical journal, இந்தியாவுக்கு அடுத்த நிலையில் 18 லட்சம் பேர் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இறக்கும் நாடாக சீனா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
