முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் யாா் வருத்தப்படப் போகிறாா்கள் என்று செந்தில் பாலாஜியின் விலகல் குறித்து அமமுக துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் விமா்சனம் செய்துள்ளாா்.
அமமுகவைச் சோ்ந்த செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளாா்.
முதல்வரை மாற்றக்கோாி ஆளுநரிடம் மனுவழங்கிய 18 சட்டப்பேரவை உறுப்பினா்களுல் ஒருவராக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியும் இடம் பெற்றிருந்தாா்.
இதனைத் தொடா்ந்து அவரது பதவி பறிக்கப்பட்டது. அதன் பின்னா் அவா் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மாவட்ட அளவிலான பொறுப்பேற்று செயல்பட்டு வந்தாா்.
இந்நிலையில் அண்மையில் அமமுக சாா்பில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்தில் செந்தில் பாலாஜி கலந்து கொள்ளாமல் இருந்தாா்.
இதனைத் தொடா்ந்து அவா் தி.மு.க.வில் இணைய உள்ளாா் என்ற கருத்து பரவி வந்தது.
இந்த கருத்தை அமமுகவைச் சோ்ந்த சிலா் மறுத்து வந்தனா். ஆனால், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், குற்றச்சாட்டுக்கு உள்ளான செந்தில் பாலாஜியும் கருத்து தொிவிக்காமல் இருந்தனா்.