சென்னை ஐஐடி பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை கண்டுபிடித்துள்ளனர்..
இதற்கு சக்தி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வு சண்டிகரில் உள்ள இஸ்ரோவின் செமிகண்டக்டர்ஆய்வுக்கூடத்தில் நடைபெற்றது.
சென்னை ஐஐடியின் முதன்மை ஆராய்ச்சியாளர் இதுகுறித்து கூறியதாவது ’இந்த மைக்ரோ பிராசசரின் டிசைனானது அனைத்து டிவைஸ்களிலும் பயன்படுத்தும் விதமாக கண்டறியப்படுள்ளது.
புளூஸ்பெக் என்றஉயர்ரக சிந்தசிஸ் மொழியால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதைமின்சார சாதனம் முதல் கணினிவரை பயன்படுத்த முடியும்.
இந்த மைக்ரோ பிராசசரைபயன்படுத்தும்போது சைபர் தாக்குதல் முற்றிலுமாக கட்டுபடுத்த முடியும்.
இந்த மைக்ரோபிராசசரை பயன்படுத்தஇந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
மேலும் இதன் அடுத்தகட்ட முயற்சியாக இன்னும் மேம்பட்ட மைக்ரோ பிராசசரைஉருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது என்றும் அந்தமைக்ரோ பிராசசருக்கு பராசக்தி என்று பெயர் சூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.