செஸ் ஒலிம்பியாட் 2022: வண்ணக்கோலம் பூண்ட மாமல்லபுரம்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம், காணும் இடமெல்லாம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது…போட்டிக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் மாமல்லபுரம் வந்துள்ளது.
உலகமே உற்றுநோக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரம் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, 29-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன.
187 நாடுகளை சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் 356 அணிகள், சதுரங்க ஆட்டத்தில் காய்களை நகர்த்த காத்திருக்கின்றன. இதற்காக, மாமல்லபுரம் பூஞ்சேரியில் 22 ஆயிரம் சதுர அடியில் ஓரு அரங்கமும், 52 ஆயிரம் சதுர அடியில் மற்றொரு பிரமாண்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒட்டி, பூஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதிகள் முழுவதும் வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே, சுவர் ஓவியங்கள் வரையப்பட்டும், நகரின் முகப்பில் உள்ள சிற்பக்கலைத் தூண், அனைவரையும் கவரும் வகையில் பொலிவுற்றுள்ளது
சென்னை நேப்பியர் பாலம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதி வரையிலான வழித்தடத்தில் உள்ள கருப்பு, வெள்ளை பெயின்டிங் மற்றும் ஓவியங்கள், பதாகைள் அனைவரையும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன. இவற்றை பார்ப்போர், தாங்களே செஸ் போர்டினுள் நுழைந்தது போன்ற உணர்வை பெறும் வகையில் அமைந்துள்ளன.
அங்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், செங்கல்பட்டு எஸ்பி சுகுணாசிங் தலைமையில் டிரோன் கேமராக்கள் மூலம் கடற்கரை மற்றும் விளையாட்டு அரங்கின் வெளிப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.

பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் பூஞ்சேரி பகுதியில் மட்டும் 6 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக, மருத்துவக் குழுவினர் 300-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுகின்றனர். 30 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறவுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கான தொடக்க விழா முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு முதல்ர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எக்காரணத்தை கொண்டும் மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக்கூடாது: பள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..

அதிமுக (ஒபிஎஸ்) சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர். அசோகனுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு…

Recent Posts