நிபந்தனை ஜாமீன் கிடைத்ததையடுத்து புழல் சிறையில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுதலையானார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1 ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, வேல்முருகன் தலைமையில் சிலர் உளுந்தூர்ப்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கியதாக புகார் எழுந்தது.
இதேபோல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த இரண்டு போராட்டங்கள் தொடர்பாகபவும் வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கோரி வேல்முருகன் சென்ன உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, புழல் சிறையில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விடுவிக்கப்பட்டார்.