டிச -17 ஆந்திரா அருகே புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்திருப்பதாவது:

 

தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று சென்னைக்கு தென்கிழக்கே 690 கி. மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது வலுப்பெற்று புயலாக மாறும். இந்த புயல் ஆந்திர மாநிலம், ஓங்கோல் காக்கி நாடா இடையே டிசம்பர் 17 ல் பிற்பகலில் கரையை கடக்கும். 

 இதனால் அடுத்த இரு தினங்களுக்கு ஆந்திர மாநிலத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வரும் 15, 16 தேதிகளில் வட தமிழக கடலோரா பகுதிகுகளில் மிதமான மற்றும் கன மழை பெய்யக்கூடும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை இன்று லேசான மழையும், நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் தரைக்காற்று வீசும் . வரும் . 14,15, 17 தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

 

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..

ரபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Recent Posts