டெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..

டெல்லி சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததுடன் வரும் 16-ந்தேதி கலைஞர் சிலையை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார்.

பின்னர் டெல்லி மின்கா பகுதியில் கட்டவுள்ள திமுக அலுவலக இடத்தை பார்வை யிட்டார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, டி.ஆர்பாலு, ஆர்.எஸ் பாரதி, அ.ராஜா உடனிருந்தனர்.