அடுத்த 24 மணி நேரத்தில் 9 கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக பாலசந்திரன் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் ஆனைக்காரசத்திரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல் சீர்காழி 7 செ.மீ., மீனம்பாக்கம், காரைக்கால் தலா 5 செ.மீ. , திருத்தணி, செங்கல்பட்டு தலா 2 செ.மீ., செங்குன்றம், தாம்பரம், சாத்தான்குளத்தில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
