தமிழகத்தில் இன்று புதியதாக 5,980 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.73 லட்சத்தினை கடந்துள்ளது.
இன்று பரிசோதனை செய்யப்பட்ட 73,547 மாதிரிகளில் 5,980 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 24வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,73,410 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 5,603 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,13,280 ஆக அதிகரித்துள்ளது. இன்று 80 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து கடந்த 19 நாட்களாக 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,420 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட 5,980 நபர்களில் 1,294 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,24,071 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சென்னையில் மட்டும் 2,564 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்யானந்தா…

மாநிலங்களுக்கு உள்ளே பயணிக்க இ பாஸ் கூடாது: மத்திய உள்துறை செயலர் அதிரடி..

Recent Posts