
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.! சென்னை வானிலை ஆய்வு மையம்..
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், கரூர், மதுரை, தேனி, திருச்சி, விருதுநகரில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
உள்மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் பெரும்பாலான இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.