வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதிகளில் மிகமிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
