தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க முடியுமா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கேள்வி..


தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க முடியுமா என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கறிஞர் சபரி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கான பதிலை வரும் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழக காவல்துறையின் இந்த கொடூர செயலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.