
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரியிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது. தேர்தலை உடனடியாக நடத்த கோரிய மனுதாரர், தற்போது அவகாசம் கேட்பது ஏன்?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இறுதியில் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று 4 மாத காலம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்ற அவகாசம் வழங்கியதையடுத்து ஜனவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியாகும் என தெரிகிறது.