நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு செயல் படுவேன்: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு அனைவருடனும் இணைந்து செயல்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

 

ஆர்.பி.ஐயின் புதிய கவர்னராக பொறுப்பேற்றபின் முதன்முறையாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

 

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் நலன் கருதி அனைவருடன் இணைந்து செயல்படுவேன். தற்போதைய பொருளாதார சூழ்நிலையை புரிந்துகொள்ள முனைப்புடன் செயல்பட விரும்புகிறேன். ஆர்.பி.ஐயின் சுயாட்சி மற்றும் நம்பகத்தன்மையை பேணி பாதுகாப்பேன்; அதன் முதற்கட்டமாக வங்கித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து தனி கவனம் செலுத்தப்படும். நாளை பொதுத்துறை அதிகாரிகளை சந்திக்க முடிவு செய்துள்ளேன் என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு கிடைத்த தோல்வி : சோனியா காந்தி கருத்து..

Recent Posts