நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடக் கூடாதாம்: பாஜகவின் அடுத்த வேட்டு

காங்கிரஸ் மற்றும் அதன் பழைய தலைவர்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிப்பதில் மோடி தலைமையிலான பாஜக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, நேருவின் பிறந்த நாளான 14 ஆம் தேதியை இனி குழந்தைகள் தினமாக கொண்டாடக் கூடாது என பாஜகவைச் சேர்ந்த 60 எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை மாற்ற வேண்டும் என டெல்லி மேற்கு தொகுதி எம்.பி. பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தலைமையில் 60 எம்.பி.க்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

அதில் குரு கோபிந்த் சிங்கின் மகன்கள் உயிர் துறந்த டிசம்பர் 26ஆம் தேதியை குழந்தைகள் தினமாக கொண்டாட வகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நேருவை குழந்தைகள் மாமா என்றே செல்லமாக அழைத்ததால், நவம்பர் 14ஆம் தேதியை மாமா தினமாக கொண்டாட வேண்டும் என்று கடிதத்தில்