மெர்சல் திரைப்பட வசனங்களுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மெர்சல் திரைப்படத்தில் உள்ள வசனங்களை நீக்குமாறு பாஜக கோருகிறது. பராசக்தி படம் தற்போது வெளியாகியிருந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
இயக்குநர்கள் கவனிக்க: சட்டம் வரப்போகிறது. நீங்கள், அரசின் கொள்கைகளை புகழ்ந்து டாக்குமென்ட்ரிகள்தான் எடுக்க முடியும். இவ்வாறு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ப.சிதம்பரம்.
