அப்பாடா… அதிகார பூர்வமாவும் அதே பட்டியலை வெளியிட்டது பாஜக… பாவம் ஹெச்.ராஜா… முந்திரிக் கொட்டையாகி மொக்கை வாங்கினார்

பாரதியா ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, மத்திய தலைமை அதிகார பூர்வமாக அறிவிக்கு முன்னரே, ஹெச்.ராஜா வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இந்நிலையில், தற்போது பாஜக அதிகாரபூர்வமாக நாடு முழுவதும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதே பட்டியலைத் தான் ஹெச்.ராஜாவும் சொன்னார். பின்னர், அவரே அதை மறுத்தும் பேட்டி கொடுத்து வழக்கம் போல சர்ச்சைக்குரியவராகி விட்டார்.

சிவகங்கை – ஹெச். ராஜா

தூத்துக்குடி – தமிழிசை சவுந்தரராஜன்

ராமநாதபுரம் – நயினார் நாகேந்திரன்

கோவை – சி.பி. ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி  பொன்.ராதாகிருஷ்ணன்

வாரணாசி – பிரதமர் மோடி

ராஜ்நாத்சிங் – லக்னோ

அமேதி – ஸ்மிருதி இரானி

காந்திநகர் – அமித்ஷா