பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசு தலைவர் மாளிகையில், வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்வில், தொடர்ந்து 2ஆவது முறையாக, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார்.
இந்த பதவியேற்பு விழாவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பாரா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை.