பெண்களுக்கு மிகவும் ஆபத்தான டாப் 10 நாடுகள் குறித்து உலகளாவிய வல்லுனர்கள் குழு ஆய்வொன்றை சமீபத்தில் நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டது.இதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், காங்கோ, ஏமன், நைஜீரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
பொருளாதார சுதந்திரம், சுகாதார பாதுகாப்பு, பாரம்பரிய நடைமுறைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.