பேஸ்புக்கில் தமிழக முதல்வரை தவறாக சித்தரித்த இளைஞர் கைது..

பேஸ்புக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தவறாக சித்தரிக்கும் வகையில் மார்ஃபிங் செய்த புகைப்படத்தை வெளியிட்டதால் உசிலம்பட்டியை சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஓகி புயலின் பாதிப்பை பார்வையிட பிரதமர் மோடி கன்னியாகுமாரி வந்திருந்தார். கன்னியாகுமாரி வந்த பிரதமரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் பழனிச்சாமியும் வரவேற்றனர். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மோடியுடன் கைகுலுக்குவதுபோல் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியானது.

எப்போதும் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டைப்பையில் ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் இருக்கும் , அந்த இடத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பதுபோல் உசிம்பட்டியை சேர்ந்த இளைஞர் மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.