மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் தவிர மற்றவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயிலுக்குள் உயர் தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும்,கோவிலுக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
