ஆண்டு கணக்கு முடிவு நாளான மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் மார்ச் 31 ஆம் தேதி வங்கிகளையும் திறந்துவைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.