மாலதிக்கு எங்கிருந்து பணம் வந்ததோ அங்கிருந்தே ஹதியாவுக்கும் வந்ததது: அப்துல் வஹாப்

ஹதியாவிற்கு வழக்கு நடத்த பணம் எங்கிருந்து வந்தது என்றார்கள்.!

மாலதிக்கு அங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே ஹதியாவிற்கும் வந்தது.

மாலதியின் கணவர் ஆதிமுத்து குவைத்தில் அப்துல் வாஜித் என்பரை கொலை செய்து விடுகிறார்.

குவைத் சட்டப்படி கொலைக்கு மரண தண்டனை அல்லது மன்னிப்பு தான் தீர்வு.

அப்துல் வாஜித்தின் குடும்பத்தினர் மன்னிக்காததால், ஆதி முத்துவிற்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

ஏழையான ஆதிமுத்துவின் குடும்பதினர் செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள்.

ஆதி முத்துவின் மனைவி கண்ணீருடன் இந்திய முஸ்லிம் லீக் தலைவரை சந்தித்து தனது ஏழ்மையும் அவரின் கணவர் மரணித்து விட்டால் குடும்பம் நிற்கதியாகி விடும் என கதறினார்.

இஸ்லாமிய சட்டப்படி பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னித்தால் நஷ்டயீடு கொடுத்து விடுதலை செய்ய வாய்ப்புள்ளது.

இதை குறித்து கொல்லப்பட்ட அப்துல் வாஜித் குடும்பதினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு நியமிக்கப்பட்டது.

அல்குர்ஆன் வசனம் “தண்டிப்பதை விட மன்னிப்பது சிறந்தது” என்பதை ஓதிக்காண்பிக்க அவர்கள் குடும்பதினர் நாங்கள் ஏழ்மையில் இருக்கின்றோம், என் கணவர் கொல்லப்பட்டு விட்டதால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம் என்றிருக்கிறார்கள்.

இறுதியில் முப்பது லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக நிவாரணம் அளிப்பதாக அந்த குழு கூற ஒரு வழியில் அவர்களும் சம்மதித்தார்கள்.

ஆனால் முப்பது லட்சம் நஷ்டயீடு கொடுக்கும் அளவிற்கு மாலதியிடம் பணம் இல்லை.

மீண்டும் அவர் கவலையில் ஆழ்ந்து விட, முஸ்லிம் லீக்கே முப்பது லட்சத்தை சமுதாய மக்களிடமிருந்து திரட்டி மாலதியிடம் கொடுத்து கொல்லப்பட்ட அப்துல் வாஜித் குடும்பதினரிடம் ஒப்படைக்க வைத்தார்கள்.

இது தான் இஸ்லாம் கற்று தந்த அழகிய ஜிஹாத்.

ஹதியாவிற்கு பணம் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பிய சங்பரிவார கும்பல் ஒரு போதும் மாலதிக்காக வரவில்லை.

எம்மை பொறுத்தவரை மாலதியோ ஹதியாவோ எங்கள் சகோதரிகளே.

Courtesy : Fahad Ahmed

சமூகநீதி காவலர் வி.பி.சிங்: கோவி லெனின்

மாயமான தமிழக கேரள மீனவர்கள் 173 பேர் லட்சத்தீவில் பத்திரமாக உள்ளனர்..

Recent Posts