முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று கண்ணில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்ணில் புரை ஏற்பட்டதால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, அவர் நேற்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, பின்னர் வீட்டுக்குத் திரும்பினார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், அவர் பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கவில்லை.
