ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வென்றுள்ளன.
இந்நிலையில், முதலமைச்சர் பதவிக்கு முன்னர் அதே பதவியை வகித்துள்ள அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் போட்டி இருந்தது. இருவரும் நேற்று முதல் டெல்லியில் முகாமிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தனர்.
இந்நிலையில், அசோக் கெலாட் முதலமைச்சராகவும், சச்சின் பைலட் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்பார்கள் என டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.