வரும் 26-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்குவதுக்குச் சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு சராசரி அளவைவிடக் கூடுதலாகப் பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 24, 25-ம் தேதிகளில் தென்மேற்குப் பருவமழை விலகும்.
