வரும் அக். 25ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 10 செ.மீ., சிவகங்கையில் 8 செ.மீ., பேச்சிப்பாறையில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
