வேலூரில் 2 கோவில் தேர்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வேலூரில் கோவிலில் இருந்த 2 தேர்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன. உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன.

மேலும் தீ விபத்தில் சேதம் அடைந்த பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை வேறு இடிந்து விழுந்தது. இந்த சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சத்துவாச்சாரியில் உள்ள மாரியம்மன், பொன்னியம்மன் கோவிலில் நின்று கொண்டிருந்த 2 தேர்கள் நள்ளிரவில் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தன. இதைப் பார்த்து அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

இந்தியாவிலிருந்து கோழி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரசு தற்காலிக தடை..

சென்னை ஐசிஎப் அருகே ரயில்வே தொழிற்சங்க பொதுச்செயலாளர் புதியவன் வெட்டிக்கொலை..

Recent Posts