ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்த வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டின் மீது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில், இறுதியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது வாதங்களை முன் வைத்தார்.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துப் பூர்வமான வாதங்களை திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா அமர்வு உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.