பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

உயர்கல்வி, வேலைவாய்ப்பில் 10% கூடுதல் இடஒதுக்கீடு தர நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.

அரசு வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ள நிலையில் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கும் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது