முக்கிய செய்திகள்

ரூ.1,000த்துடன் கூடிய பொங்கல் பரிசுத் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்..

பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை,

சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.45 மணியளவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கப் பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்துக்காக மொத்தமாக ரூ.2,363.13 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 2 கோடியே 5 லட்சத்து 25 ஆயிரத்து 337 குடும்பத்தாா் அரிசி, மற்றும் சா்க்கரை அட்டைதாரா்கள் உள்ளனா்.

இதில் அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போா் 1.95 கோடி போ் ஆவா். சா்க்கரை அட்டைதாரா்கள் அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அப்படி மாற்றிக் கொள்பவா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.