10-ம் வகுப்புக்கான பொதுதேர்வு ரத்து : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் நடைபெறவிருந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.  வரும் 15-ஆம் தேதி தொடங்க இருப்பதாக பள்ளி கல்வித் துறை அறிவித்திருந்தது.
கரோனா பாதிப்பு கட்டுக்குள் இல்லாத காரணத்தால் உயர்நீதிமன்றம் முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தின.

இன்று முதல்வர் தலைமையில் கல்வியமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்வதாக அறிவித்தார். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.

அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மற்றும் வருகைபதிவிற்கு 20% வழங்கப்படும்.என்று அறிவித்தார்.

11ம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். 12ம் வகுப்பு மீதமுள்ள தேர்வு சூழ்நிலைக்கு ஏற்ப நடத்தப்படும் என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 80%மும் மாணவர்களின் வருகைப்பதிவுக்கு 20%மும் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.

மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு …

புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து..

Recent Posts