முக்கிய செய்திகள்

10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..


நடப்பு கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2017-18ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பிற்கான தேர்வுகள் 2018ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி முடிகின்றன.

முதல் முறையாக இந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வை தமிழக அரசு நடத்துகிறது. இத்தேர்வு மார்ச் 7ஆம் தேதி ஆரம்பமாகிறது. ஏப்ரல் 16ஆம் தேதி முடிகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்திய முதல் முறை இத்தேர்வு நடைபெறுவது கவனிக்கத்தக்கது.