தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
இதில் சிவகங்கை மாவட்டம் மகரிஷி வித்யா மந்திர் காரைக்குடி ,வித்யாகிரி பள்ளி காரைக்குடி & புதுவயல், கலைமகள் வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி புதுவயல் மற்றும் லீடர்ஸ் பள்ளி காரைக்குடி மாணவர்கள் 100 சதவிகித வெற்றியுடன் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி விஜயலெட்சுமி 587, மதிப்பெண் எடுத்து முதலிடமும், நந்தினி 585 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும்,தினேஷ் 584 மதிப்பெண்களுடன் முன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
பள்ளியின் தாளாளர்,முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

காரைக்குடி & புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சாய்வர்ஷா-588 மதிபெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்,மேலும் வணிகவியல் மற்றும் கணிப்பொறிபயன்பாட்டில் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அலமுப்பிரியா 582 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும்,கேசவ நிவேதிதன் 581 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றனர்.

100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் பள்ளிக் குழுத் தலைவர் கிருஷ்ணன்,தாளாளர் முனைவர் ஆர்.சுவாமிநாதன், பொருளாளர் காஜி முகமது மீரா,வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வரியா சரண் சுந்தர், வித்யா கரி பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன், புதுவயல் பள்ளி முதல்வர் குமார் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த காவிய தர்ஷ்னி 578 மதிப் பெண்களுடன் முதலிடமும், சுபஸ்ரீ 576 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும்,ரவின் ரஷ்மிதா 569 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் தாளாளர்,முதல்வர்,ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

காரைக்குடி தி லீடர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கீர்தனா -589 மதிப் பெண்கள் பெற்று முதிடமும், பழநியப்பன்-582 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ரூவாந்திகா-575 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தி லீடர்ஸ் பள்ளி தாளாளர் ராஜமாணிக்கம், பள்ளி முதல்வர் நிவேதிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்