12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாத 50000 மாணவர்கள் குறித்து பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…

2022-2023- ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகு்பு பொது தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழ் மொழித்தாள் தேர்வுக்கு 50000 மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை, இது குறித்து சமூக ஆர்வலர்கள் முதல் அரசியல் வாதிகள் வரை தங்கள் கவலையை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். இது குறித்து தமிழ்நாடு கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் நீண்ட நெடிய விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வது மட்டுமல்ல எங்கள் வேலை அல்ல என்றார்.கரோனா காலத்தில் இடைநின்ற மாணவர்கள் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் திரும்பவும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 50000 மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை, ஆனால் 70000 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

தேர்வு எழுதாத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அடுத்து வரும் தேர்வுகளை எழுத ஊக்க அளிக்கப்படும் என்றார்.

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் – …

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி : பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது

Recent Posts