தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் பள்ளிகளில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன. மேலும் செய்முறை வகுப்புகளும், வாரத்தில் இரண்டு நாக்ள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 03-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
